தமிழர்கள் தினகரனுக்கு ஓட்டு போடுங்க..! சுப்பிரமணியன் சாமி பிரசாரம்..!

 
Published : Dec 19, 2017, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
தமிழர்கள் தினகரனுக்கு ஓட்டு போடுங்க..! சுப்பிரமணியன் சாமி பிரசாரம்..!

சுருக்கம்

subramanian swamy supports for dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டியும் விமர்சித்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால், லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் பத்திரிகையாளர் அன்பழகன் ஆகியோர் நடத்திய கள ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், திமுகவிற்கும் தினகரனுக்கும் இடையில்தான் பிரதான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் முடிவடைவதால் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளரும் களத்தில் உள்ள நிலையில், தினகரனுக்கு வாக்களிக்குமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சாமி, ஆர்.கே.நகரில் திமுகவிற்கும் தினகரனுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக அத்தொகுதியில் கள பணியாற்றும் பாஜகவினர் மூலம் அறிந்துகொண்டேன். தமிழர்கள் அனைவரும் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">I learn from some BJP activists that the Chennai RK Nagar poll has narrowed to DMK vs Dinakaran. Obviously then Tamils must vote for TTVD.</p>&mdash; Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/status/942736572574662657?ref_src=twsrc%5Etfw">December 18, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இரட்டை இலை சின்ன விவகாரத்திலும் சசிகலா-தினகரன் அணிக்கு ஆதரவாக பேசியிருந்த சுப்பிரமணியன் சாமி, தான் சார்ந்த கட்சியின் வேட்பாளர் ஆர்.கே.நகர் களத்தில் இருக்கும் போது, தினகரனுக்கு ஆதரவாக டுவீட்டியிருப்பது தமிழக பாஜக தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!