ரஜினி இதெல்லாம் செய்யட்டும்.. அப்புறமா ரஜினியை அம்பலப்படுத்துறேன்!! சு.சுவாமி சூளுரை..!

 
Published : Dec 31, 2017, 02:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
ரஜினி இதெல்லாம் செய்யட்டும்.. அப்புறமா ரஜினியை அம்பலப்படுத்துறேன்!! சு.சுவாமி சூளுரை..!

சுருக்கம்

subramanian swamy criticize rajinikanth political entry

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கியமானவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

நீண்ட இழுபறிக்கும் பெரிய எதிர்பார்க்கும் மத்தியில் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவிற்கு சாதகமோ பாதகமோ கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

ரஜினியின் அரசியல் வருகையை ஜி.கே.வாசன், மு.க.அழகிரி, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்தனர். பிஜேபியின் பினாமி, காவியின் மற்றொரு முகம் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் சம அளவில் இருக்கிறது.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இது வெறும் அரசியல் அறிவிப்புதான். வேறு எந்த விவரங்களும் அதில் இல்லை. அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகங்கள்தான் இதை பெரிதுபடுத்தி காட்டுகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்கள் புரிந்துகொள்வார்கள். அரசியல் கட்சியின் பெயரையும் வேட்பாளர்களையும் அறிவிக்கட்டும். அதன்பிறகு ரஜினியை நான் அம்பலப்படுத்துகிறேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!