மகளப்பத்தி கேட்டப்போ ஜெயலலிதாவுக்கு பயங்கரமா கோபம் வந்துச்சு !!  கொளுத்திப் போட்ட சுப்ரமணியன்சாமி !!!

 
Published : Nov 29, 2017, 03:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
மகளப்பத்தி கேட்டப்போ ஜெயலலிதாவுக்கு பயங்கரமா கோபம் வந்துச்சு !!  கொளுத்திப் போட்ட சுப்ரமணியன்சாமி !!!

சுருக்கம்

subramanian samy speak about jayalalitha daughter

தான் மத்திய அமைச்சராக இருந்தபோது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அவரது மகள் குறித்து கேட்டபோது, பயங்கரமாக கோபப்பட்டதாகவும், கருணாநிதியின் பொய் பிரச்சாரம்தான் மகள் விவகாரம் என்று ஜெ.கொந்தளித்தாகவும் , பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த  அம்ருதா என்ற பெண், தான் மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மகள் என்றும், இது தொடர்பாக ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து  மரபணுச் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி சடங்கு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், பெங்களூரு  நீதிமன்றத்தை நாட வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனிடையே  ஜெயலலிதா உறவினர் லலிதா என்பவர், ஜெயலலிதாவுக்கும், நடிகர் சோபன் பாபுவுக்கும் பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்றும்,  ஜெயலலிதாவின் தாய் இறந்து விட்டதால், என் பெரியம்மா ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

தனக்கு குழந்தை பிறந்தது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என, ஜெயலலிதா, என்னிடம் சத்தியம் வாங்கினார் என்று தெரிவித்த லலிதா, அந்த  குழந்தை, அம்ருதா தான் என, உறுதியாக தன்னால் கூற முடியாது என்றும் கூறினார்.

இதை மரபணுச் சோதனையில் தான் உறுதிப்படுத்த முடியும்  என்றும், தன் அம்மா ஜெய்சிகாவின் அண்ணன் ஜெயராமின் மகள் தான் ஜெயலலிதா என்றும் லலிதா தெரிவித்திருந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பூதாகரமாக கிளம்பியிருக்கும் இப்பிரச்சனை குறித்து பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அவரது மகள் குறித்து கேட்டபோது, பயங்கரமாக கோபப்பட்டதாகவும், கருணாநிதியின் பொய் பிரச்சாரம்தான் மகள் விவகாரம் என்று ஜெ.கொந்தளித்தாகவும் தெரிவித்தார்.

தான் மத்திய அமைச்சராக இருந்தபோது  ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில், அவரிடம் இது குறித்து பேசியபோது, கடுமையாக  கோபப்பட்டதாக கூறினார்.

இப்பிரச்சனையில் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சுப்ரமணிய்னசாமி தெரிவித்தார்.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!