திமுக சுரேஷ் ராஜனை பச்சை பச்சையாக திட்டிய எஸ்.ஐ...! சிங்கம்பட சூர்யா பாணியில் அட்டகாசம்..!

By sathish kFirst Published Sep 10, 2018, 6:13 PM IST
Highlights

பாரத் பந்த் என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டின் மிகப் பெரிய கட்சியான திமுக தாமாக முன் வந்து ஆதரவு அளித்தது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக சர்ச்சைக்குள்ளானது என்னவோ கன்னியாகுமரி மாவட்டம்தான்.

பாரத் பந்த் என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டின் மிகப் பெரிய கட்சியான திமுக தாமாக முன் வந்து ஆதரவு அளித்தது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக சர்ச்சைக்குள்ளானது என்னவோ 
கன்னியாகுமரி மாவட்டம்தான்.

பல இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை கட்டாயப்படுத்தி கடைகளை மூடியும் வாகனங்களை திருப்பி அனுப்பியும் செய்த சம்பவங்கள் அரங்கேறின. இதேபோன்று நாகர்கோவில் நகரத்தின் பிரதான சாலை ஒன்றில் அம்மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன் தலைமையில், இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் திறந்துள்ள கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

மேலும், சாலையில் நின்று கொண்டு வாகனங்களை மறித்து வந்தனர். அங்கு விரைந்து வந்த நாகர்கோவில் டவுன் எஸ்.ஐ. முத்துமாரி, அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், சுரேஷ் ராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைய மறுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இது மெல்ல மெல்ல வாய்த்தகராறாக மாறியது. பின்னர், இருவருக்கும் தடித்த வார்த்தைகளால் சொற்போராக மாறிப்போனது. உச்சகட்டமாக காது கூசும் அளேவுக்கு இரு தரப்பிலும் பச்சை பச்சையாக வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

அதிலும், எஸ்.ஐ. முத்துமாரி, சிங்கம் பட சூர்யா ரேஞ்சுக்கு ஹை மாடுலேஷனில் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் ரேஞ்சில், அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளைக் கூறி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை நேருக்கு நேராக கழுவி ஊற்றியுள்ளார். 

இது அங்கிருந்த பொதுமக்களையும், கட்சி பிரதிநிதிகளையும் அதிர்ச்சிடைய வைத்தது. பின்னர் அங்கு வந்த நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் எஸ்.ஐ. முத்துமாரியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். ஆனாலும் தொடர்ந்து எஸ்.ஐ. முத்துமாரி, சிங்கம் பட பாணியில் அலறிக் கொண்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஒருவரை நட்டநடு சாலையில், பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் சத்தம் போட்டு திட்டிக் கொண்டு எஸ்.ஐ. முத்துமாரி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. எஸ்.ஐ.யின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், முத்துமாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவில் நகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

click me!