மாணவர்களே ரெடியா இருங்க.. பிப்ரவரி 1ம் தேதி எல்லா வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படுகிறது..?? அமைச்சர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2022, 2:12 PM IST
Highlights

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி ஜனவரி 31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுத உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்கலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாணவர்களின் நலன் கருதி பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது  குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியாகும் என்றும், கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளை நடத்த பள்ளிகல்வித்துறை தயாராக உள்ளது என்றும் சுழற்சி முறை இல்லாமல் எப்போதும் போல பள்ளிகள் நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை முடிந்துள்ளது. முதல்வர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். பொது தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். கொரோணா காலகட்டத்தில் பள்ளிகளை நடத்த பள்ளிகல்வித்துறை தயாராக உள்ளது. 

சுழற்சி முறை இல்லாமல் எப்போதும் போல பள்ளிகள் நடைபெறும். For சிலபஸ் கவர் செய்வது மிக பெரிய சவாலாக உள்ளது. தொடர்ந்து வழக்கமான வகுப்புகள் நடைபெறும்.பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்க அனுமதி கிடைத்தால் வழக்கம் போல மே மாதம் தேர்வுகள் நடைபெறும். 90 சதவீத்திற்கு மேல் 15 முதல் 18 வயதுடைய மானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

click me!