தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்... இத்தனை அவசரமா..?!

By Thiraviaraj RMFirst Published May 21, 2021, 6:01 PM IST
Highlights

பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படாது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்படாது எனத் தெரிவித்துள்ளது.
 

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசியவர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது  எல்லாம் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் வந்தவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். மக்கள் தங்களுடைய கிராமத்திலேயே போராட்டம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு போலீசார் போராட்டத்திற்கு தடைவிதித்து மக்களை கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் செல்லும்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்பின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடர்ந்தனர். 93 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படாது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்படாது எனத் தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம். கொரோனாவால் செத்து மடியும் உடல்களையும், மேற்கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்படும் அவசியம் இருக்கும் நிலையில் ஏதேதோ செய்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது அரசு. எதற்காக இத்தனை அவசரமாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் எதற்காக அந்த வழக்குகளை இத்தனை அவசரமாக வாபஸ் பெறவேண்டும்? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

click me!