கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான திசையில் செல்கிறோம்... பிரதமர் மோடி பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Aug 11, 2020, 3:01 PM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. எனினும், பல மாநிலங்களில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டெல்லி, குஜராத், பீகார் மாநிலங்கள் உள்ளன. 

இந்நிலையில், பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடி உரையாற்றுகையில்;- கொரோனா தடுப்பு பணி சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.  சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழலும் உருவாகிறது. 

கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது.கொரோனா இறப்பு விகிதம் குறைந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பது நாம் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறது. அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும். நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

click me!