முதியோரின் கோரிக்கைகளை உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு..! உச்ச நீதி மன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2020, 5:43 PM IST
Highlights

மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏராளமான முதியோர்கள் ஆதரவற்றவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். 

ஆதரவின்றி தனியாக வாழும் முதியோர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மாநிலங்களவை  எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமாரின் மனு தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சிறைச்சாலைகள் மற்றும் குழந்தை  பராமரிப்பு நிலையங்களில் கொரோனா பரவல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் தனது கவலை வெளிபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் நாடு முழுவதும் 19 லட்சத்து 10 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 39 ஆயிரத்து 856 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  

மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏராளமான முதியோர்கள் ஆதரவற்றவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர் ஊரடங்கு காரணமாக உதவு ஆட்கள் இன்றி  பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார், உச்சநீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கொரோனா நெருக்கடியில் மூத்த குடிமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நேரத்தில் வயதானவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு மாநில  அரசுகளுக்கு உத்தரவிட்டது. 

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் வயதானவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முகக் கவசங்கள் மற்றும் பிபிஇ முழு உடற் கவச உடைகளை வழங்கவும்  அதேபோல் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், தடையின்றி   கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு  உத்தரவிட்டது. அதேபோல் மாநில  அரசுகள் இதற்கான வழிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டுள்ளது. தனியாக வாழும் முதியோரின் பிரச்சினைகளுக்கு  உடனடி தீர்வு காண வேண்டும் என மாநில அரசுகளுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிறைச்சாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

\

click me!