தொல்.திருமாவளவன் குடும்பத்தில் கொரோனாவால் ஏற்பட்ட திடீர் மரணம்.. முதல் ஆளாக இரங்கல் தெரிவித்த டிடிவி..!

Published : Aug 05, 2020, 03:21 PM ISTUpdated : Aug 05, 2020, 03:33 PM IST
தொல்.திருமாவளவன் குடும்பத்தில் கொரோனாவால் ஏற்பட்ட திடீர் மரணம்.. முதல் ஆளாக இரங்கல் தெரிவித்த டிடிவி..!

சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவனின் அக்கா பானுமதி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவனின் அக்கா பானுமதி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசியல்வாதிகள், துப்புரவு பணியாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொல்.திருமாவளவனின் அக்கா பானுமதிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தத. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொல்.திருமாவளவனின் அக்கா மறைவிற்கு டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அன்புச்சகோதரி பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். அன்னாரை இழந்து வாடும் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி