ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஸ்டாலின் செய்யும் புது அரசியல்...!! தமிழ்நாடு பாலிடிக்ஸுக்கு இதெல்லாம் ரொம்பப் புதுசு பாஸு...!!

By Vishnu PriyaFirst Published Oct 25, 2019, 4:58 PM IST
Highlights

ஒரு டைப்பான பாலிடிக்ஸை ஸ்டாலின் செய்தார்.எப்படியென்றால்... “ஜெயலலிதா சர்வாதிகாரிதான். ஆனால், மத்திய அரசுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை.’ என்று புகழ்ந்து தள்ளியவர் கூடவே “அவரது மர்ம மரணத்தின் உண்மையானது, அடுத்து அமையும் தி.மு.க. ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்படும். நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று சொல்லி, ஜெ., மீது அக்கறை இருப்பவராக தன்னை காட்டினார்.

இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில்  எதிர்பார்த்தது போலவே சரிவை சந்தித்திருக்கிறது தி.மு.க. கூட்டணி. ஆனால் இதை அன்றே கணித்துவிட்ட தி.மு.க. பொருளாளர் துரைமுருகனோ ‘இரண்டு தொகுதி இடை தேர்தலின் வெற்றி, தோல்வியால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. இதன் முடிவுகள் பொது தேர்தலின் முடிவை எந்த வகையிலும் பாதிக்காது.’ என்றார்.  ஆனாலும் கூட முழு மூச்சுடன் தான் இடைத்தேர்தல்களுக்காக உழைத்தார் ஸ்டாலின். ஆனாலும் அவர் மனதிலும் ‘தோற்றாலும் சரி, வென்றாலும் சரி’ என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இந்த இரு தொகுதிகளின் பிரசாரத்தின் போது ஒரு புது ஸ்கிரிப்டை அடிக்கடி பேசினார் அவர். 

தமிழக அரசியலுக்கு அது ரொம்ப புதுசு. அதாவது ஜெயலலிதாவை உயர்த்திப் பேசி, ஒரு டைப்பான பாலிடிக்ஸை ஸ்டாலின் செய்தார். 
எப்படியென்றால்... “ஜெயலலிதா சர்வாதிகாரிதான். ஆனால், மத்திய அரசுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை.’ என்று புகழ்ந்து தள்ளியவர் கூடவே “அவரது மர்ம மரணத்தின் உண்மையானது, அடுத்து அமையும் தி.மு.க. ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்படும். நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று சொல்லி, ஜெ., மீது அக்கறை இருப்பவராக தன்னை காட்டினார். ஸ்டாலினின் இந்த ஸ்ட்ண்ட் ஏன்? இதனால் எதுவும் நன்மை அவருக்கு கிடைக்குமா? என்று அலசியபோது பேசியிருக்கும் அரசியல் ஆளுமைகளின் பதில் இப்படி இருக்கிறது....
“ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாய் சொல்லி தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். இப்போது அதை வலியுறுத்தவில்லை. சில முறை அழைத்தும் கூட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.  இதனால் ஸ்டாலின் இப்படி சொல்லியிருக்கலாம். இந்த பேச்சை நம்பி, பெரும்பான்மை அ.தி.மு.க.வினர் தி.மு.க. பக்கம் செல்ல மாட்டார்கள். 

ஆனால் சுயநல வி.ஐ.பி.க்கள் சிலர் போகலாம்!’என்கிறார் மாஜி அ.தி.மு.க. எம்.பி.யான கே.சி.பழனிசாமி. மாஜி அ.தி.மு.க. அமைச்சரான வளர்மதி “தொடர் பொய்யான வழக்குகளின் மூலம் ஜெயலலிதாவுக்கு மன உளைச்சலை உண்டாக்கி அவரை நோயில் படுக்க வைத்து, மரணத்துக்கு காரணமாக அமைந்ததே இந்த தி.மு.க.தான். ஆனால் இன்றோ ஏதோ அம்மா மீது அக்கறை காட்டுவது போல் பேசுகிறார்கள். கேழ்வரகில் நெய் வடியுது!ன்னு ஸ்டாலின் சொன்னால், அதை நம்புபவர்களுக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னுதான் அர்த்தம். எடப்பாடியாரை விட்டுட்டு யாரும் அவராண்ட போமாட்டாங்க.” என்கிறார். 

ஆனால் தி.மு.க. எம்.பி. சிவாவோ “மறைந்த ஜெயலலிதாவை அரசியல் ரீதியில் வேறுபடுத்திப் பார்க்காமல், முதல்வராயிருந்தவரின் மரணத்திலுள்ள மர்மத்தை வெளிக்கொணர நினைக்கிறார் ஸ்டாலின். இதில் அரசியல் ஏதுமில்லை.” என்கிறார். 
சர்தான்!
 

click me!