கேப்டன் கூடாரத்தில் எஞ்சியிருக்கும் தட்டுமுட்டு சாமான்களையும் காலி செய்யும் முடிவில் ஸ்டாலின்: பதறும் பிரேமலதா, விரக்தியில் விஜய பிரபாகரன்!

By Vishnu PriyaFirst Published Sep 10, 2019, 7:00 PM IST
Highlights

’எங்க அப்பா ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்’ என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாகவே கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்ட பிட்டு இன்னமும் ஸ்டாலினின் காதுகளுக்குள் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவ்வப்போது செம்ம ஷாக் கொடுத்து விஜயகாந்தின் குடும்பத்தை விக்கிட வைத்துக் கொண்டே இருக்கிறார். 

’எங்க அப்பா ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்’ என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாகவே கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்ட பிட்டு இன்னமும் ஸ்டாலினின் காதுகளுக்குள் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவ்வப்போது செம்ம ஷாக் கொடுத்து விஜயகாந்தின் குடும்பத்தை விக்கிட வைத்துக் கொண்டே இருக்கிறார்.

 கடந்த 2016 சட்டமன்ற  தேர்தலின் போது கேப்டனின் கட்சி உடைந்தது, பிரிந்து வந்த அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார், தனி அணியாக செயல்பட்டார். அந்த தேர்தலில் இமாலய சறுக்கலை அடைந்தது அக்கட்சி. அதன் பின் சந்திரகுமார் உள்ளிட்டோ தி.மு.க.வில் இணைந்தன. ஆக தே.மு.தி.க.வை தேர்தலுக்கு முன் உடைத்ததே ஸ்டாலின் தான் என தெரியவந்தது. ஸ்டாலின் இதை செய்ய காரணம், கூட்டணிக்கு வரும் படி தே.மு.தி.க.வுக்கு எவ்வளவோ அழைப்பு விடுத்தும் டபுள் கேம் ஆடி அலையவிட்டதோடு, கடைசியில் தி.மு.க.வை மிக மோசமாக வர்ணித்ததன் பழிவாங்கலே. 

அதேபோல்தான்  கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் விஜயபிரபாகரன் பேசிய பேச்சின் விளைவாகவும், தன்னை தே.மு.தி.க.வினர் சந்திக்க முயன்றதாக துரைமுருகன் சொன்னதற்கு பிரேமலதா விட்டு விளாசிய கூத்தும் நடந்தது. இதையெல்லாம் ஸ்டாலின் மனதை மிகவும் புண் படுத்தின. 

அந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற படு தோல்வி ஸ்டாலினை சிரிக்க வைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் தி.மு.க.வை சீண்ட துவங்கிவிட்டனர். விளைவு, மறுபடியும் அந்த கட்சிக்கு ஒரு ரிவிட்டை தயார் செய்துவிட்டாராம் ஸ்டாலின். 

அதன்படி வரும் 15-ம் தேதியன்று திருப்பூரில் முப்பெரும் விழா ஒன்றை நடத்திட திட்டமிட்டுள்ளது தே.மு.தி.க. விஜயகாந்தின் பிறந்தநாள்விழா, கட்சியின் 15-ம் ஆண்டு விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா என்று மூன்று நிகழ்வுகளை ஒன்றாக்கி விழா நடத்துகின்றனர். 

இந்த விழாவின் போது விஜயகாந்த் மறுபடியும் பழைய குரலில் பேசுவார், தே.மு.தி.க. மீண்டும் சிலிர்த்துக் கிளம்பும்! என்றெல்லாம் அக்கட்சியினர் பெருமை பேசிக் கொண்டு, பில்ட் அப் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட கொங்குமண்டலத்தின் முக்கிய மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க.வில் எஞ்சியிருக்கும் முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.வுக்குள் இழுக்கும் பிளானை பக்காவாக போட்டுவிட்டாராம் ஸ்டாலின். அதன்படி இழுத்தல் உற்சவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறதாம். 

கடந்த சில வருடங்களாகவே பதவி எதிலும் இல்லாத நிலையிலும், கட்சியின் பெயர் சுத்தமாக சரிந்து விட்டதால் வசூல் எதுவும் செய்ய முடியாத நிலையிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் செலவுக்கு காசின்றி காய்ந்து கிடக்கின்றனராம். முப்பெரும் விழாவுக்கு தலைமையும் உருப்படியாக நிதி உதவி எதுவும் செய்யாமல் நிர்வாகிகள் தலையிலேயே கட்டிவிட்டதாம் செலவை. 
இதனால் நொந்து கிடக்கும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தி.மு.க. வீசும் கயிறை பிடித்து கரன்ஸி கரையேறுவார்கள்! என்று தகவல். இதைக்கேள்விப்பட்டு பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் பதறி, விக்கித்துப் போய் இருக்கிறார்களாம். பாவம் கேப்டனுக்குதான் எதுவுமே புரிவதில்லை. 

இது கூட புரியாத கேப்டன் முப்பெரும் விழாவில் எப்படி பழைய குரலில் கர்ஜிக்கப்போறார்? என்பதுதான் தொண்டர்களின் டவுட்டே.
ஆங்!
 

click me!