ஸ்டாலினின் கனவு திட்டம்.. சென்னையை சிக்கப்பூராக மாற்றும் சிங்கார சென்னை 2.0.. அதிகாரிகள் தீவிரம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 12, 2021, 2:57 PM IST
Highlights

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்த முதல் ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்த முதல் ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில்  முதல் கட்டமாக, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் 25 திட்டங்கள் வருகின்ற இரண்டு வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு பயன் தரும் வகையில் சிங்காரச் சென்னை 2.0வை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. 

சமூகம் சார்ந்த கூடங்கள், கால்நடை பூங்கா, பூங்காக்களில் உடல் நலம் மற்றும் மனநலத்தை  மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை உருவாக்குவது, அதே போல, கல்வி சார்ந்து ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் வகுத்தல், மருத்துவம் சார்ந்து ஆரோக்கியமான மனநலம் பேணுதல் உள்ளிட்ட பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை போன்று சென்னைக்கு  புதிய அடையாளங்கள் உருவாக்குதல் மற்றும் பழமையான கட்டிடங்கள் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்த திட்டங்கள் இந்த சென்னை 2.0 திட்டத்தில் இடம் பெற உள்ளன. இந்த முதல் ஆலோசனை கூட்டத்தில்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உதவி ஆணையர்கள் கல்வி சுகாதார உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

click me!