
திமுக தலைவர் கருணாநிதியை மோடி நேரில் நலம் விசாரித்தது மனிதாபிமான செயல்தான் என்றும் . இந்த சந்திப்பை வைத்து ஆதாயம் தேடவோ , மோடியை நாங்கள் அரசியலுக்காக பயன்படுத்தவோ மாட்டோம் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்..
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றதை அடுத்து இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையி்ல நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசி திமுக செய்ல் தலைவர் மு.க.ஸ்டாலின், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் ஏடிஎம் வாசலில் காத்திருந்த போது எத்தனை பேர் மக்கள் மயங்கி விழுந்தார்கள் ? 100க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தார்களே ? இதற்கெல்லாம் யார் காரணம்.? இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்தார்.
:பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார்கள். 50 நாட்களுக்குள் 74 முறை மாறி மாறி பல அறிவிப்புகள் வெளியிட்டார்கள். இதனை அறிவிப்பதற்கு முன்னர், ரிசர்வ் வங்கி மத்திய அரசு, மோடி திட்டமிட்டிருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்களுடன் கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் ரூபாய் நோட்டு வாபஸ் கொண்டு வரப்பட்டது எத்தனை கொடுமையானது தெரியுமா என கேள்வி எழுப்பினார்..
பிரதமர் மோடி கோபாலபுரம் வந்தார். ஸ்டாலினுடன் கை கோர்த்தார் அதனால் புதிய . கூட்டணி உருவாகிவிட்டது என சிலர் தங்கள் கற்பனைக்கு ஏற்ப செய்தி வெளியிட்டார்கள். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியை மோடி நேரில் நலம் விசாரித்தது மனிதாபிமான செயல் என்று கூறிய ஸ்டாலின் இந்த சந்திப்பை வைத்து ஆதாயம் தேடுபவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது என்றார்.
மோடி - கருணாநிதி சந்திப்பை அவரவர் வசதிக்கேற்ப திட்டமிட்டு பேசுகின்றனர். ஆனால் ஒரு நாளும் நாங்கள் மோடியை அரசியலுக்காக பயன்படுத்த மாட்டோம் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.