அன்று மொட்டை அடித்து அழுது உருகிய தீர்ப்புக்கு, இன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்… மு.க.ஸ்டாலின் வியப்பு..

 
Published : Feb 15, 2017, 08:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அன்று மொட்டை அடித்து அழுது உருகிய தீர்ப்புக்கு, இன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்… மு.க.ஸ்டாலின் வியப்பு..

சுருக்கம்

அன்று மொட்டை அடித்து அழுது உருகிய தீர்ப்புக்கு, இன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்… மு.க.ஸ்டாலின் வியப்பு..

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் அன்று தண்டனை அறிவிக்கப்பட்டபோது அது திமுகவின் சதி எனறு கூறி மொட்டை அடித்து வழிபாடு நடத்தியவர்கள் இன்று அதை இனிப்பு வழங்கி கொண்டாடுவதாக திமுக் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெங்களூரு சிறப்பு நிதிமன்ற நீதிபத்  குன்ஹா அன்று அளித்த  தீர்ப்பு நியாயமானதென தற்போது வந்துள்ள தீர்ப்பு நிரூபித்துள்ளது என தெரிவித்தார்.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியான போது அதனை திமுகவின் சதி என்று சொன்ன அதிமுக வினர் காவடி எடுத்தும் , அலகு குத்தியும், மொட்டை அடித்தும் அழுது புலம்பினர்.

அதே தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டபோது அதிமுக வினர், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அப்போது யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அழுதார்களோ அவர்கள் எல்லாம் இன்றைக்கு கொண்டாடி வருகின்றனர் என வேடிக்கையாக தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு