
சசிகலா ஜால்ரா உதயகுமார் திருமங்கலத்திற்குள் வரக் கூடாது,,,தொகுதி மக்கள் கடும் கொந்தளிப்பு…
அமைச்சர் உதயகுமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் தொகுதிக்குள் வந்தால் அவரை நுழையவிட மாட்டோம் என அத்தொகுதி பொது மக்கள் ஆத்திரத்துடன் பொங்கி எழுந்துள்ளனர்.
தமிழக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே நடைபெற்ற போட்டியில் 124 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,ஓபிஎஸ்க்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சசிகலா முதலமைச்சர் ஆவதற்காக தனது திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே அத்தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என ஓபிஎஸ் கூறியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்காக நாங்கள் வாக்களித்து உதயகுமாரை தேர்ந்தெடுத்தோம், ஆனால் சசிகலாவுக்காக அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
இனி உதயகுமார் எங்கள் தொகுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் ராஜினாமா செய்து விட்டுத்தான் வர வேண்டும், இல்லையென்றால் அவரை விரட்டியடிப்போம் என தெரிவித்தனர்.
அவத் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்றால் வேர் டெபாசிட் கூட வாங்கமுடியாது என தெரிவித்த அதிமுகவினர், அவர் எந்தவழியில் தொகுதிக்குள் நுழைய முயன்றாலும் அவரை விரட்டியடிப்போம் என ஆவேசமான தெரிவித்தனர்