
போயஸ் கார்டனில் தொண்டர்களிடம் இறுதியாக உரையாற்றிய சசிகலா, யாரும் அழ வேண்டாம் எங்கிருந்தாலும் என் மனம் உங்களை சுற்றியே இருக்கும் என உருக்கமாக பேசினார்.
நான்கு ஆண்டு தண்டனை கிடைத்தவுடன் கூவத்தூரிலிருந்து சசிகலா நேற்றிரவு போயஸ் இல்லம் திரும்பினார். அவரை தொண்டர்கள் உருக்கத்துடன் வரவேற்றனர்.
மகளிர் அணியினர் கண்ணீர் விட்டு அழுதனர். குடும்ப உறுப்பினர்களும் கண்ணீர் மல்க உடனிருந்தனர். அவர்கள் முன்னர் சசிகலா பேசியதாவது.
யாரும் பயப்பட வேண்டாம்.அதிமுகக் காலத்துக்கும் தமிழ்நாட்டை ஆழ வேண்டும்,.அண்ணா சொன்னார் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று., புரட்சித்தலைவர் பாடல்களில் வரும் வீரமான வரிகளை நெஞ்சில் தாங்கி வாழ்கிறேன்.
சிங்கம் போல் இருந்தவர் அம்மா அவருடன் பயணித்தவள் நான். எனக்கு பயமில்லை. நான் எந்த கூண்டில் நின்றாலும் கழகத்தை காப்பாற்றுவேன்.
எல்லா தலைகளையும் நான் கவனித்து கொண்டுத்தான் இருப்பேன். நான் மீண்டும் வெளியே வரும் போது அதிமுக ஆட்சித்தான் வரும்.
தயவு செய்து யாரும் அழவேண்டாம். உறுதியாக ஒற்றுமையுடன் இருங்கள். இவ்வாறு சசிகலா உருக்கமுடன் பேசினார்.