நான் முதல்வரானதும் முதல் வேலையாக என்ன பண்ணுவேன் தெரியுமா? எதிரணியை கதிகலங்க விடும் அசால்ட் சபதம்...

By sathish kFirst Published May 6, 2019, 12:30 PM IST
Highlights

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது மட்டுமல்லாமல், அவர்களைச் சிறையில் அடைப்பதுதான் ஆட்சி மாறிய பிறகு நமது முதல் வேலை என ஸ்டாலின் சபதம் ஏற்றுள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது மட்டுமல்லாமல், அவர்களைச் சிறையில் அடைப்பதுதான் ஆட்சி மாறிய பிறகு நமது முதல் வேலை என ஸ்டாலின் சபதம் ஏற்றுள்ளார். 

காலியாக உள்ள நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின்,  சூலூர் சட்டமன்றத் தொகுதி  வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரித்து நேற்று சூலூர் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய ஸ்டாலின், “ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல், மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான தேர்தல். மே 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்தல் பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான தேர்தல் இது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளனர். அந்த ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று இதுவரை 6 முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருமுறை கூட ஓ.பன்னீர்செல்வம் போகவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர்செல்வம்தான் முதன்முதலாகக் குற்றம்சாட்டினர். அதன் பிறகுதான் நாங்கள் அதைப்பற்றி பேசி வருகிறோம்.

மத்தியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் ஆட்சி மாறக்கூடிய வகையில்தான் தேர்தல் முடிவுகள் வரப்போகிறது.ஜெயலலிதாவுக்கும் எங்களுக்கும் கொள்கையில் வேறுபாடுகள் இருக்கலாம், எதிர்க்கட்சியாக இருக்கலாம். 

ஆனால், அவர் முதலமைச்சர். அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது மட்டுமல்லாமல், அவர்களைச் சிறையில் அடைப்பதுதான் ஆட்சி மாறிய பிறகு நமது முதல் வேலை அதை யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான் எனக் கூறினார்.

click me!