4 தொகுதியில் திடீர் பணப்புழக்கம்! மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி!

By Selva KathirFirst Published May 6, 2019, 12:02 PM IST
Highlights

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் மக்கள் நீதி மையம் கட்சியில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது அக்கட்சியின் நிர்வாகிகள் கூட நம்ப முடியவில்லை.

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் மக்கள் நீதி மையம் கட்சியில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது அக்கட்சியின் நிர்வாகிகள் கூட நம்ப முடியவில்லை.

நான்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கமல்ஹாசன் கடந்த 3 நாட்களாக மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது  கமல் செல்லும் இடங்களுக்கு அவர் ரசிகர்கள் கூட வரவில்லை. இதனால் சில இடங்களில் கமல் தேர்தல் பிரச்சாரத்தையே ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒரு தலைவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றால் அதற்கென்று சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அந்த முன்னேற்பாடு களுக்கு கணிசமான தொகையை செலவிட வேண்டும். இவையெல்லாம் நடந்தால் தான் அந்த தலைவரை பார்ப்பதற்கு கூட்டம் கூடும் என்பது அரசியலில் சொல்லப்படாத விதி. எம்ஜிஆர் ஆக இருந்தாலும் சரி ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி கூட்டத்தை கூட்டுவதற்கு என்று கணிசமான தொகையை அதிமுக செலவிடுவதில் உறுதியாக இருக்கும்.

இந்த பாணியை பின்பற்றிய காரணத்தினால் தான் கமல் பிரச்சாரத்திற்கு கூட்டம் வரவில்லை என்று அப்போதே ஒரு பேச்சு இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக நான்கு தொகுதி இடைத்தேர்தலில் மற்றும் கமல் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூட்டம் திரள்வதன் பின்னணியில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் இருந்து கணிசமான தொகை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை வைத்தே தற்போது அக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் செலவில் தீவிரம் காட்டி வருவதாகவும் பேச்சு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரபல நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து மக்கள் நீதி மையம் கட்சி திமுக அதிமுகவை வாய் பிளக்க வைத்தது.

தற்போது இடைத்தேர்தலிலும் முன்னணி கட்சிகளுக்கு ஈடாக செலவு செய்து கூட்டத்தை கூட்டுவது கமல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

click me!