சொந்த தொகுதியையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின்.. தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்.. எகிறி அடித்த ஜெயக்குமார்.

Published : Nov 26, 2021, 01:59 PM IST
சொந்த தொகுதியையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின்.. தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்.. எகிறி அடித்த ஜெயக்குமார்.

சுருக்கம்

7 மாதத்தில் திமுக அரசின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்பதியும், வெறுப்பும் உண்டாகியுள்ளதாக கூறினார். மக்களுக்கு எதுவும் செய்யாமல் விளம்பரத்தை மட்டும் நம்பி உள்ள அரசு திமுக அரசு, அம்மாவின் திட்டங்களுக்கு மூடு விழா செய்யும் நிலையே உள்ளது என்றார்.   

தனது சட்டமன்ற தொகுதியையே பாதுகாக்க முடியாத முதலமைச்சர் தமிழகத்தை எப்படி பாதுகாப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழிப்பியுள்ளார். நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான விருப்பமனுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயபுரம், திருவிகநகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நியாயமாக, ஜனநாயாக முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக திமுக தலையீடில்லாமல் நடைபெற வேண்டும் என்றார். செயற்கையான வெற்றியை கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்றது. 

நியாயாமாக வெளிப்படையாக தேர்தல் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என எச்சரித்தார். 7 மாதத்தில் திமுக அரசின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்பதியும், வெறுப்பும் உண்டாகியுள்ளதாக கூறினார். மக்களுக்கு எதுவும் செய்யாமல் விளம்பரத்தை மட்டும் நம்பி உள்ள அரசு திமுக அரசு, அம்மாவின் திட்டங்களுக்கு மூடு விழா செய்யும் நிலையே உள்ளது என்றார். ஆனால் உலகம் உள்ள வரை அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் என்றார். ஆகஸ்ட் மாதத்தில் வடிகால்கள் தூர்வாறப்படவில்லை, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை, மழைக்கு நிவாரணம் அறிவிக்காமல், தேங்கியுள்ள மழை நீரை அகற்றாமல் நத்தை வேகத்தில் கூட ஒப்பிட இயலாத அளவிற்கு செயல்படும் அரசாக இந்த அரசு உள்ளதாக அவர் விமர்சித்தார். அம்மாவின் அரசு பல்வேறு சாதனை செய்துள்ளது, மக்களுக்கு அதனை எடுத்து சொல்லி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்றும் தெரிவித்தார். 

 கூட்டணியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் என்ன நிலைபாடோ அதே தான் தொடரும் என்றார். கடந்த தேர்தலில் தொடர்ந்த கூட்டணி தற்போது வரை தொடர்கிறது என்றார். சட்ட ஒழுங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு பெண் தனியாக எப்போது நடந்து செல்கிறாரோ அப்போது தான் முழு சுதந்திரம், ஆனால் திமுக அரசால் இங்கு காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கண்டனத்திற்கு உரியது என்றார், ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்று இதற்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார், இதற்கு திமுக அரசு தான் காரணம் என்றார். 

மழைக்கான எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காததால் தான் தற்போது தண்ணீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜெயக்குமார் தனது சட்டமன்ற தொகுதியையே பாதுகாக்க முடியாத முதலமைச்சர் தமிழகத்தை எப்படி தமிழகத்தை பாதுகாப்பார் என கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் காவல்துறை அதிகாரியே தனியாக செல்ல முடியாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ள நிலையில், தனிமனித பாதுகாப்பை இந்த அரசு எவ்வாறு உறுதி செய்யும் என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல் ஏற்கனவே அம்மா உணவகங்களில் சப்பாத்தி, சாம்பார் சாதம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது, அங்கு பணி செய்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை, இதுபோன்ற நிலையில், எதற்கு புதிதாக திமுக தலைவர் பெயரில் எதற்கு உணவகம் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கருணாநிதி பெயரில் உணவகங்களை திறந்துவிட்டு, ஜெயலலிதா பெயரில் உள்ளதை மூட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று செய்வதாக கூறிய ஜெயக்குமார், இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?