கனிமொழி 50..! பாசமிக்க அண்ணனிடம் வாழ்த்து பெற்ற அன்புத்தங்கை....

 
Published : Jan 05, 2018, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
கனிமொழி 50..! பாசமிக்க அண்ணனிடம் வாழ்த்து பெற்ற அன்புத்தங்கை....

சுருக்கம்

Stalin were among those who greeted party MP Kanimozhi on her 49th birthday

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா உருப்பினருமான கனிமொழி தனது 50ஆவது பிறந்த நாளான இன்று அண்ணன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு சிஐடி காலனி வீடு களைகட்டியுள்ளது. தொண்டர்கள் குவிந்துள்ளனர். வாழ்த்து முழக்கமிட்டு வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் வழி நெடுகிலும் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக போராடி வந்த ஸ்பெக்ட்ரம் 2G வழக்கில் இருந்து விடுதலை பெற்ற உற்சாகம் , பொன் விழா பிறந்தநாளாக கொண்டாட்டம்  என சிஐடி காலனி திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இன்று 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கனிமொழி தனது தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்று பெற்றார். கனிமொழி வழக்கமாக சிஐடி காலனியில் தனது தந்தை முன்னிலையில் கேக் வெட்டும் கனிமொழி, இந்த ஆண்டு  செய்ய முடியவில்லை, காரணம் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி.  கோபாலபுரம் சென்ற கனிமொழி, தனது தந்தையிடம் ஆசி பெற்றார். கனிமொழிக்கு வாழ்த்து கூறினார் கருணாநிதி.



இந்நிலையில், வயதை தொட்டுள்ள கனிமொழி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது பாசமிகு அண்ணன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது ஸ்டாலின் மஞ்சள் கலர் பொன்னாடை போர்த்தினார். துர்கா ஸ்டாலின் நீல கலர் பட்டுப்புடவையை கனிமொழிக்கு பரிசளித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்