திமுக ஆட்சியில் ஸ்டாலின் மதுரைக்கு வரவே பயப்பட்டார்..! அதிரடி காட்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

By T BalamurukanFirst Published Nov 11, 2020, 10:13 PM IST
Highlights

திமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரைக்கு வரவே பயப்பட்டார்.அப்படி இருந்தவருக்கு சுதந்திரம் கொடுத்தது அதிமுக அரசு என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

 திமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரைக்கு வரவே பயப்பட்டார்.அப்படி இருந்தவருக்கு சுதந்திரம் கொடுத்தது அதிமுக அரசு என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை தங்கராஜ் சாலையில் 1986 ஆம் ஆண்டு முதல் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு  செய்தியாளர்களிடம் பேசும் போது... 'அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். திமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மதுரைக்கு வர பயப்பட்டார். பீகார் தேர்தல் காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியாததால், தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறை தேர்தலை அதிமுக ஆட்சியில் 2 முறை நடத்தி முடித்து உள்ளோம். திமுக ஆட்சி காலத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அதிமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்த்து ஸ்டாலின் பேச வேண்டும். கொரோனா தொற்று காலகட்டத்தில் பாஜக நடத்தும் வேல்யாத்திரையை தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார், எனக் கூறினார்.

click me!