ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் !! இந்தியா டுடே அதிரடி கருத்துக் கணிப்பு !!

By Selvanayagam PFirst Published Jan 5, 2019, 11:05 AM IST
Highlights

இந்தியா டு டே பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின்தான் வருவார் என தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடத்திய கணிப்பில் 41 சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்டாலின் இந்த ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 2 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் அதிமுக அரசு பாஜகவின் சொல்படி நடக்கும் ஆட்சியாக மாறிவிட்டது என பேசப்பட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் ஆசியுடன் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்களின் பதவி நீக்கம், நாடாளுமன்றத்  தேர்தல், ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றால் இந்த ஆட்சி எப்போது கவிழுமோ என மக்களிடையே அச்சம் இருந்து வருகிறது.

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பேச்சும் அடிபடுகிறது, இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக அடுத்து யார் வருவார்கள் என இந்தியா டு டே அதிரடியாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது.

இந்தியா டு டே நிறுவனம் கடந்த  டிசம்பரிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலும் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.

இதில் டிசம்பர் கருத்துக் கணிப்பில் 41 சதவீத ஆதரவைப் பெற்று ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்று பொது மக்களால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்  கடந்த 4 நாட்களில் மீண்டும் இந்தியா டு டே எடுத்த கருத்துக்  கணிப்பில் ஸ்டாலின் 43 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.

அவரைத்  தொடர்ந்து  யார் அடுத்த முதலமைச்சர் என்ற ரேஸில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  நடிகர் கமல்ஹாசன் 10 சதவீத ஆதரவையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 சதவீத ஆதரவையும், டி.டி.வி.தினகரன் 8 சதவீத ஆதரவும், ரஜினி 5 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு 54 சதவீத்த்தினர் கடும் எதிர்ப்பு  தெரிவித்திருப்பதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்ததுள்ளது.

click me!