"நிரந்தரம் இல்லாத ஆட்சியில் நிரந்தரம் இல்லாத கவர்னர்"-ஸ்டாலின் கடும் தாக்கு!!

First Published Jul 29, 2017, 1:28 PM IST
Highlights
stalin talks about governor


தமிழகத்தில் நிரந்தரம் இல்லாத ஆட்சி நடைபெறுவதால், நிரந்தரம் இல்லாத கவர்னர் இருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நிரந்தர கவர்னர் வேண்டும் என கூறி பிரதமர், ஜனாதிபதி உள்பட பலரிடம் திமுக சார்பில் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் நியமிக்கவில்லை. காரணம், இங்கு நடக்கும் ஆட்சி நிரந்தரம் இல்லாதது. அதனால்தான், நிரந்தரம் இல்லாத கவர்னர் செயல்படுகிறார்.

குட்கா ஊழல் குறித்து புகார் கூறியதுடன் வழக்கும் தொடர்ந்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தலைமை செயலாளர் மவுனமாக இருக்கிறார். குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது. அதற்கு திமுக இடம் கொடுக்காது. எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருக்கும். பாஜகவின் மதவாத சக்திக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை போகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!