தாறுமாறாக அந்தர் பல்டியடித்த ஸ்டாலின்...! வியந்து போன பிஜேபி...!

By Asianet TamilFirst Published Aug 24, 2019, 6:18 PM IST
Highlights

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தவறு இழைத்து விட்டது என்று பேசிவந்தவர் திடீரென அதை தவறு என்று சொல்லவில்லை கையாண்ட விதத்தைதான் தவறு என்றோம் என அசால்டாக இப்படி பல்டியடித்து விட்டாரே என்றும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அவரின் இந்த மாறுபட்ட கருத்து  அவரின் அரசியல் உறுதிபாட்டை கேள்வி எழுப்பியுள்ளது.
 

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கியது தவறு என்பதற்காக டெல்லிக்குபோய் போராடவில்லை , அதை நடைமுறைப்படுத்திய விதம்தான்  தவறு என்றுதான் போரடினோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தடாலடியாக பல்டியடித்துள்ளார். அவரின் இந்த பேச்சு கடும்விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதுடன், பாராளுமன்றத்தில் அதை சட்டமாகவும் நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பலரால் பாராட்டப்பட்டாலும் பலர் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர், அந்த வகையில் மத்திய அரசின் நடவடிக்கையை திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக  விமர்சித்தார், காஷ்மீர் மன்னருடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறிவிட்டது, காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. அந்த மக்களின் உரிமைகளை  பறித்துக்கொண்டது என்று குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் நாட்டின் சர்வாதிகாரிகள் போல் செயல்படுகின்றனர் என்று ஸ்டாலின்கடுமையாக விமர்சித்தார்.  

அத்துடன் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை  திரும்ப பெற வேண்டும் மற்றும் அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ள  முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க  வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் ஸ்டாலின், அறிவித்தபடியே போராட்டத்தை நடத்தினார், ஆனால் அந்த போராட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என கடைசி நேரத்தில் விலகிக்கொண்டார், இதானல் தன் சொந்தக் கட்சிக்காரர்களின் விமர்சனத்திற்கு ஆளானார் ஸ்டாலின். இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் , காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நிலைபாட்டை பலர் பலவிதாமாக விமர்சித்து வருகின்றனர், 

இந்த நாட்டிற்கு திமுகவை எதிரிகளைப்போல் சித்தரித்து வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது  தவறு என்று, டெல்லியில் போய் போராடவில்லை கையாண்ட விதம் தவறு, முறையாக அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டித்தான் போராடினோம் என்றார். அவரின் இந்த பேச்சு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது , காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தவறு இழைத்து விட்டது என்று பேசிவந்தவர் திடீரென அதை தவறு என்று சொல்லவில்லை கையாண்ட விதத்தைதான் தவறு என்றோம் என அசால்டாக இப்படி பல்டியடித்து விட்டாரே என்றும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அவரின் இந்த மாறுபட்ட கருத்து  அவரின் அரசியல் உறுதிபாட்டை கேள்வி எழுப்பியுள்ளது.
 

click me!