மரணத்தின் விளிம்பில் காங்கிரஸை கதற விட்ட அருண் ஜேட்லி..!

Published : Aug 24, 2019, 04:45 PM IST
மரணத்தின் விளிம்பில் காங்கிரஸை கதற விட்ட அருண் ஜேட்லி..!

சுருக்கம்

முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி இறப்பதற்கு முன் வெளியிட்ட கடைசி ட்விட்டர் பதிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி இறப்பதற்கு முன் வெளியிட்ட கடைசி ட்விட்டர் பதிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆகஸ்டு 9 அன்று உடல்நிலை கோளாறால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆகஸ்டு 9 அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஆகஸ்டு 7 ல் சுஷ்மா ஸ்வராஜ் இறப்பிற்கு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

ஆகஸ்டு 6ம் தேதியன்று அவர்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுதான் அவர் கடைசியாக எழுதிய அரசியல் பதிவு. அதில் காங்கிரஸை விமர்சித்திருந்த அவர் “காங்கிரஸ் இப்போது ஒரு தலை இல்லாத கோழி. (அதாவது தலைமையில்லாத காங்கிரஸ்) இந்திய மக்களிடமிருந்து அது அந்நியப்பட்டுவிட்டது. புதிய இந்தியா எப்போதோ உருவாகி விட்டது. ஆனால், காங்கிரஸ் மட்டும்தான் அதை இன்னும் உணராமல் இருக்கிறது. கட்சியை அதள பாதாளத்துக்கு கொண்டு செல்லும் போட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது” என்று பதிவிட்டு இருந்தார். 

 

பாஜக மக்களவையில் முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவற்றிற்கான மசோதாக்களை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்தபோது இந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார் அருண் ஜேட்லி. 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!
மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!