"நீட் தேர்வில் நிரந்தர தீர்வுதான் வேண்டும்… தற்காலிக தீர்வு தேவையில்லை" - ஸ்டாலின் அதிரடி

First Published Jul 25, 2017, 1:49 PM IST
Highlights
stalin statement about neet exam


நீட் தேர்வில் தற்காலிக விலக்குப் பெறுவது என்பது பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ‘நீட்’ எனும் அநீதிக்கு எதிராக மாணவர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தமிழக அரசு தாமதமாக உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடைசி நேரத்தில் எதையாவது செய்து நீட் தேர்வில் தற்காலிகமாக விலக்கு பெற்றுவிடலாம் என  தமிழக அரசு முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காண முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், நீட்டைத் திணிக்காதீர்கள் என்று கேட்பது மாநில உரிமை என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? என்றும், அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தற்காலிக விலக்கு தேவையில்லை என்றும் நிரந்தரமாக தீர்வு வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!