உங்களுக்கு வெட்கமே இல்லையா ? உண்ணாவிரதத்துக்கு காரணமான பாஜகவை ஏன் விமர்சனம் செய்யல….அடுக்கடுக்கா கேள்வி கேட்கும் ஸ்டாலின்…

Asianet News Tamil  
Published : Apr 03, 2018, 09:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
உங்களுக்கு வெட்கமே இல்லையா ? உண்ணாவிரதத்துக்கு காரணமான பாஜகவை ஏன் விமர்சனம் செய்யல….அடுக்கடுக்கா கேள்வி கேட்கும் ஸ்டாலின்…

சுருக்கம்

stalin statement about EPS and OPS hunger strike

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய அரசுக்கு எதிராக  அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இதற்கு காரணமான பாஜக அரசைக் கண்டிக்காமல்  திமுக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சிப்பது கீழ்த்தரமான அரசியல் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்  இன்று நடைபெற்றது.  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்ட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மட்டுமே விமர்சனம் செய்தனர்.

இதற்கு தனது அறிக்கை மூலம் பதில் அளித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் துரோகத்திற்கு துணை போன அதிமுகவின் உண்மை முகம் அவர்களின் உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏமாற்றிய மத்திய அரசை கண்டிக்காமல் திமுக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சிப்பது கீழ்த்தரமான அரசியல் என தெரிவித்துள்ளார்.

தங்களின் துரோகத்தையும், இயலாமையையும் மறைக்க அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர், மக்கள் மன்றத்தில் அதிமுகவின் முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு உள்ள பெரும்பான்மையை தமிழக நலனுக்கு பயன்படுத்தாமல், பாஜகவின் துரோகத்திற்கு துணை நிற்கிறார்கள் எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!