நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நாங்க செய்யுறோம் !! எடப்பாடியை கலாய்த்த ஸ்டாலின் !!

Published : Jul 05, 2019, 09:29 PM IST
நீங்க செய்ய வேண்டியதையெல்லாம் நாங்க செய்யுறோம் !! எடப்பாடியை கலாய்த்த ஸ்டாலின் !!

சுருக்கம்

சென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பேசிய மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது என்று  குற்றம்சாட்டினார்.

சென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பேசிய மு.க.ஸ்டாலின்; தண்ணீர்ப் பஞ்சம் குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார். 

குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், தமிழகம் முழுவதும் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் நாடாளுமன்ற வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் என்ன செய்ய போகிறார்கள் எனக் கேட்டனர். ஆனால் பதவியேற்ற முதல் நாளே திமுக எம்.பி.க்கள் சாதனை படைத்தனர்.  

ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது. தமிழக மக்களை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் கிரண்பேடி பணிந்து மன்னிப்பு கோரியதற்கு திமுக தந்த அழுத்தமே காரணம் என ஸ்டாலின் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!