இன்று நள்ளிரவு முதல் உயருகிறது பெட்ரோல், டீசல் விலை ! எவ்வளவு தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jul 5, 2019, 8:11 PM IST
Highlights

மத்திய பட்ஜெடிட்டில் பரி உயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் , டீசல் கடுமையாக உயருகிறது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.50 காசுகளும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 2.30 காசும் உயர உய்யது. இது தவிர உள்ளூர் வரிகளும் இணைவதால் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. 
 

நாடாளுமன்றத்தில் மத்திய  நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் இன்று 'மத்திய பட்ஜெட்'டை தாக்கல் செய்தார்.  அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.  இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.30 காசும் உயர உள்ளது.  உயர்த்தப்பட்ட வரியுடன் உள்ளூர் வரியும் கூடுதலாக இணையும் என்பதால் நாட்டில் வெவ்வேறு இடங்களில் விலையில் மாறுபாடு இருக்கும். 

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

click me!