அறுவை சிகிச்சை முடிந்து வந்தார் ஸ்டாலின் - முதல்வர் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு!

 
Published : Jul 06, 2017, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
அறுவை சிகிச்சை முடிந்து வந்தார் ஸ்டாலின் - முதல்வர் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு!

சுருக்கம்

stalin returned to assembly

கண்புரை அறுவை சிகிச்சை முடிந்து வந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சமீபகாலமாக கண் பிரச்னையில் அவதிப்பட்டு வந்தார் இது சம்பந்தமாக 2 நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கண்புரை நோயால் அவதிப்படுவதாகவும் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 நாட்களுக்கு மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது.

சிகிச்சைக்கு பின் 2 நாளில் சட்டசபைக்கு பணிக்கு திரும்பினார். இன்று சட்டசபை வந்த அவரை முதல்வர் எடப்பாடி நலம் விசாரித்தார்.

அமைச்சர்களும் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர் அவர்களுக்கு ஸ்டாலின் சிரித்தபடியே பதிலளித்தார்.

இதே போல் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சபைக்கு இன்று வந்த சபாநாயகர் தனபாலை திமுக எதிர்கட்சி தலைவர் துணை தலைவர் எம்எல்ஏக்கள் நலம் விசாரித்தனர்.

முன்பெல்லாம் கொள்கை ரீதியான மோதல் தனிப்பட்ட மோதலாகவும் இருந்தது. ஆனால் சமீப காலமாக அரசியல் மோதல் இருந்தாலும் தனிப்பட்ட நட்பை இரண்டு கட்சிகளும் கடைபிடித்து வருகின்றன.இது ஒரு நல்ல அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!