
எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.
பின்னர், திமுக அதன் கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது என பதிலளித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக முதல்வரிடம் போனில் பேசியபோது, முதல்வர் பதிலளிக்கவில்லை என திமுக வெளியிட்ட அறிக்கை ஒருதலை பட்சமானது என முதல்வர் விளக்கமளித்துள்ளார். அதுதொடர்பாக ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட நீங்களே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரலாம் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.