"கனத்த இதயத்துடன் ஏற்கிறேன்" - கண்கலங்கிய ஸ்டாலின் - முழு விவரம்

First Published Jan 4, 2017, 10:51 AM IST
Highlights


செயல் தலைவர் பதவி என்பது பதவி அல்ல அது பொறுப்பு என்பதை உணர்ந்து கனத்த இதயத்துடன் இதை ஏற்றுகொள்கிறேன் என்று கண்ணீருடன் ஸ்டாலின் பேசினார்.

மகிழ்ச்சி , ஆராவாரம் , உணர்ச்சி பெருக்கு, கண்ணீர் என பொதுக்குழ்வில் பல பரிமாணங்கள் இன்று காணப்பட்டது. தனக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது குறித்து ஏற்புரை நிகழ்த்திய ஸ்டாலின் கண்ணீருடன் பேசினார்.

அவரது பேச்சு , நான் நன்றி உரை ஆற்ற வரவில்லை, ஏற்புரை ஆற்ற மட்டுமே வந்துள்ளேன். தலைவர் இல்லாமல் நடைபெற கூடிய பொதுக்குழு நடைபெற்று வருகிறது. விதிமுறையில் திருத்தம் செய்து செயல் தலைவராக அண்ணன் துரை முருகன் எடுத்து சொன்னார்கள், ஏதோ திடீர் என்று எடுத்த முடிவல்ல தீர யோசித்து முடிவெடுத்தது என்று. தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என பெருமையாக சொல்வதுண்டு. 

ஆனால் அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவருக்கு அவரது உடல் நலம் கருதி ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக கலந்து பேசி செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அதற்காக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்க நான் இங்கு வரவில்லை. ஏற்புரையாற்ற மட்டும் வந்துள்ளேன்.

பள்ளிப்பருவத்தில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க என்பதாகத்தான் தொடங்கியது. இளைஞர் திமுக துவங்கி அப்படித்தான் வந்தேன். வட்டபிரதிநிதிக்கு நின்று தேர்வு செய்யப்பட்டேன். பின்னர் மாவட்ட பிரதிநிதியாக போட்டியிட்டுள்ளேன் , பொதுக்குழுவுக்கு போட்டியிட்டுள்ளேன் தொடர்ந்து செயற்கு உறுப்பினராக ,பின்னர் கட்சிக்கு இளைஞர் அணி என்று ஒன்று வேண்டும் என்பதற்காக  இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்தினார் தலைவர். அதன்  அமைப்புக்குழு உருவாக்கப்பட்டு அதில்  6 பேரில் ஒருவராக இருந்தேன் .

 இளைஞர் அணி அமைப்பாளராக , செயலாளராக ,செயல்பட்டேன். பின்னர் துணை பொதுச்செயலாளர் களில்  ஒருவராக தொடர்ந்து பொருளாளர் என பல பொறுப்புகளை தாண்டி   இந்த பொறுப்புக்கு வந்த போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். 

ஆனால் இன்று இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்ள முடியவில்லை. தலைவர் உடல் நிலை இருக்க கூடிய இந்த சூழ்நிலையில்  கனத்த இதயத்துடன் இதை ஏற்றுகொள்கிறேன். 

அதிகம் பேச முடியவில்லை , பேச விரும்பவில்லை. செயல் தலைவர் பதவி என்பது தலைவருக்கு துணை நிற்க கூடிய நிலையில் தான் எனது பணி அமைய போகிறது. பொதுச்செயலாளர் , முதன்மைச்செயலாளருடன் இணைந்து செயல்படுவேன். 

தலைவர் மேயராக நான் பொறுப்பேற்ற போது சொன்னார், அது பதவி அல்ல பொறுப்பு. பொறுப்பு என்றால் பொறுப்போடு பணியாற்ற வேண்டும். செயல் தலைவர் பதவி என்பது பதவி அல்ல பொறுப்பு எனபதை கூறி பொறுப்பாக செயல்பட உறுதியேற்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

click me!