திமுகவில் வருகிறது அதிரடி மாற்றம் – 10 மாவட்ட செயலாளர்களை தூக்குகிறார் புதிய செயல் தலைவர் ஸ்டாலின்

First Published Jan 11, 2017, 1:11 PM IST
Highlights


கடந்த, 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, உள்ளடி வேலையில் ஈடுபட்ட, 10 மாவட்ட செயலர்களை மாற்ற, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

கடந்த, 2014 நாடாளுமன்ற தேர்தலில், திமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த தோல்விக்கு மாவட்ட செயலர்களின் நடவடிக்கைகளே காரணம் என கருதப்பட்டது. இதையடுத்து, திமுகவில் மறுசீரமைப்பு ஆய்வு நடத் தப்பட்டது. அதில், கட்சி ரீதியாக இருந்த, 32 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 65 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

மேலும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காமல் ஏமாந்துபோன, மாவட்ட செயலாளர்கள் சிலர், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக, உள்ளடி வேலைகளில் ஈடுபட்டனர். இதனால், திமுக தோல்வியை தழுவியது.

இந்நிலையில், செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், அதிமுக பாணியில், திமுகவில் களையெடுக்க முடிவு செய்துள்ளார். மாவட்ட செயலாளர்கள், 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர்களை மாற்றி விட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க, முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, திமுக செயல் தலைவராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் வகையில், கட்சி அணிகளில் உள்ள நிர்வாகிகளை மாற்றி வருகிறார்.

குறிப்பாக தன்னிடம் நீண்ட காலமாக இருந்த இளைஞரணி மாநில செயலாளர் பதவியை, முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும், திமுக மாணவரணியின் மாநில செயலராக, கடலுார் புகழேந்தி நீண்ட காலமாக உள்ளார். அவருக்கு, 50 வயதுக்கு மேலாகி விட்டதால், அவரை விடுவித்து விட்டு, புதிய செயலாளராக, ஸ்டாலினின் ஆதரவாளர் பரந்தாமனை நியமிக்க உள்ளார் என பரபரப்பு தகவல் வெளியாளியுள்ளது.

click me!