
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் 65 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது. பொதுமக்களிடம் அதிமுக அரசின் செயல்படாத நிலையை எடுத்துரைப்பது. மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு திரட்டுவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதை தொடர்ந்து 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்.
* விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முழு விலக்கு அளிக் வேண்டும்.
* தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை உடனடியாக போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக திமுக நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
* சட்டப்பேரவையில் வைரா விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பது.
* மத்திய அரசு கொண்டு வரும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.