ஸ்டாலின் ஒரு விளையாட்டுப்பிள்ளை... தங்கம் ஒரு திருவிழாவில் காணாமல் போன பிள்ளை... அதிர வைக்குக்கும் அமைச்சர்..!

Published : Jun 29, 2019, 03:28 PM IST
ஸ்டாலின் ஒரு விளையாட்டுப்பிள்ளை... தங்கம் ஒரு திருவிழாவில் காணாமல் போன பிள்ளை... அதிர வைக்குக்கும் அமைச்சர்..!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டு பிள்ளை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.   

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டு பிள்ளை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். 

நாகையில் 2019-2020 கல்வி ஆண்டிற்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நாகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை திமுக வாபஸ் பெற்றது குறித்து ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுப் பிள்ளை; எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என அறியாதவர்” என கூறினார்.

இதேபோல் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'திருவிழாவில் திசைமாறிய பிள்ளைகள் திரும்பி வர வெட்கப்பட்டு திமுக பக்கம் செல்கின்றனர்' அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Politics: ஓகே சொன்ன ஸ்டாலின்.! விஜய் அணிக்கு செல்லும் திருமா, கம்யூனிஸ்ட்.! டெல்லிக்கு செக்மேட் வைத்த திமுக தலைவர்.!
Tamil Nadu Politics: ஆளுநர் அடாவடியால் குறையும் பாஜக செல்வாக்கு.! இனி தாமரை மலரவே மலராது! கொதிக்கும் தமிழ்நாடு பாஜக.!