ஸ்டாலின் பாணியை பின்பற்றும் எடப்பாடி- ஓ.பிஎஸ்... சிவப்பு கம்பள வரவேற்பில் அசத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Jun 29, 2019, 2:26 PM IST
Highlights

அமமுகவிலிருந்து விலகி நேற்று கட்சியில் சேர்ந்த சசிரேகாவுக்கு ஒரே நாளில் அதிமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
 

அமமுகவிலிருந்து விலகி நேற்று கட்சியில் சேர்ந்த சசிரேகாவுக்கு ஒரே நாளில் அதிமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சசிரேகா. டி.டி.வி.தினகரன் தலைமியிலான அமமுகவில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர். அமமுகவில் இருந்த போது இவரளவுக்கு யாரும் ஓ.பிஎஸ் - எடப்பாடி இருவரையும் அவ்வளவு குறி வைத்து தாக்கிப்பேசியதே இல்லை. டி.டி.வி.தினகரனுக்கு அந்த அளவுக்கு பக்கபலமாக இருந்தார். 

ஆனால், தேர்தல் ரிசல்ட் சசிரேகாவுக்கு டி.டி.வி மீது இருந்த மரியாதையை சரித்தது. வயலண்ட் மோடில் இருந்த சசிகலா அதன் பிறகு வயலண்ட் மோடுக்கு போய் விட்டார். இந்நிலையில், நேற்று திடீரென சசிரேகா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

நேற்று அவர் கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் செய்தி தொடர்பாளர் பதவி தரப்பட்டுள்ளதாக எடப்பாடியும், ஓ.பி.எஸும் அறிவித்துள்ளனர். மாற்ரு கட்சியில் இருந்து விலகி புதிதாக யார் வந்தாலும், அவர்களுக்கு திமுக பெரிய பொறுப்பு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தது. இந்நிலையில் எடப்பாடி ஓ.பி.எஸ் இருவரும் சசிரேகாவுக்கு வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள். சசிரேகாவுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் மேலும் பல அமமுகவினரை கட்சிக்கு அழைத்து வந்து விடலாம் என்பதே இரட்டையர்களின் திட்டம். இதனால் டி.டி.வி. தரப்பு இன்னும் என்ன நடக்குமோ என்கிற கலக்கத்தில் உள்ளனர்.  

click me!