ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போலவே செயல்படுகிறார் ஸ்டாலின்.. வானளவு புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2021, 1:57 PM IST
Highlights

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை வைத்து திமுகவை விமர்சிக்கும் நடவடிக்கையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில் ரவுடிகளை ஒடுக்குவதில் அதிரடியாக களமிறங்கிய தமிழக காவல்துறை, ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற பெயரில் ஆபரேஷன் நடத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுப்ட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

ரவுடிகளை ஒடுக்குவதில் முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயலலிதாவைப்போலவே செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். மறுபுறம் இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் கேள்விக்குறியாக இருக்கிறது என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை வைத்து திமுகவை விமர்சிக்கும் நடவடிக்கையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில் ரவுடிகளை ஒடுக்குவதில் அதிரடியாக களமிறங்கிய தமிழக காவல்துறை, ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற பெயரில் ஆபரேஷன் நடத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுப்ட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இதை பலரும் பாராட்டி வரும் நிலையில், ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவைப் போலவே முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கோரிக்கை மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர் சந்தித்தார் அவர், நகர்ப்புற ஊராட்சி தேர்தலை நான்கு மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மதுரை மாநகராட்சியிலுள்ள பிரதான சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளது என்றும், அதை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்றும், பாதாளசாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சியில் எப்படி ரவுடிகளை அடக்கி ஒடுக்க நடவடிக்கை எடுத்தாரோ அதே போல தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என பாராட்டினார். அதிமுக தலைமை, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமையை விமர்சித்து வரும் நிலையில், செல்லூர் ராஜு அதற்கு நேர்மாறாக முதல்வரின் நடவடிக்கை பாராட்டி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பல்வேறு யூகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!