ஜனாதிபதி ஆகிறார் மு.க.ஸ்டாலின்... திட்டத்தை வெளிப்படுத்திய துரைமுருகன்..!

Published : May 06, 2019, 03:38 PM ISTUpdated : May 06, 2019, 05:13 PM IST
ஜனாதிபதி ஆகிறார் மு.க.ஸ்டாலின்... திட்டத்தை வெளிப்படுத்திய துரைமுருகன்..!

சுருக்கம்

இந்தியாவுக்கு ஜனாதிபதியாக வரும் வாய்ப்பும் தகுதியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு ஜனாதிபதியாக வரும் வாய்ப்பும் தகுதியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி, ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ’’மு.க.ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின்.

இந்த தேர்தலில் பிரதமர் மோடியா? ராகுலா? என விவாதம் வந்ததற்கு காரணம் ஸ்டாலின் தான். அவர் ராகுல்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டால் மோடியா? அல்லது வேறுயாராவதுமா என வந்திருக்கும்.

திமுகவை ஒழிச்சிட்டா அதிமுகவை சோழிய முடிச்சிடலாம்... சீமான் போடும் பகீர் கணக்கு..!

.

தி.மு.க தலைவர் ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என தாய் மீது சத்தியம் செய்து களத்தில் பணியாற்ற வேண்டும். அப்போது தான் சிறப்பாக பணி செய்வீர்கள். கட்சியில் உள்ள பூசல்களை தேர்தல் முடியும்வரை மறக்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் நானே வந்து குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன்’’ என கூறினார். இவர் இப்படி கூறியதால் சமூகவலைதளங்களில் ‘’ஸ்டாலினை ஜனாதிபதியாக்கி விட்டு துரைமுருகன் முதலமைச்சராகி விடப்பார்க்கிறாரோ?’’ என பதிவிட்டு வருகின்றனர். இதையும் படிங்க... ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு தூது விடும் பாஜக... கடும் அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி..!

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?