ஸ்டாலின் இதையே ஒரு பொழப்பாகவே வச்சு இருக்கிறார்... காண்டான கடம்பூர் ராஜூ...!

By vinoth kumarFirst Published Oct 25, 2020, 6:37 PM IST
Highlights

பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக அரசு தடையாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக அரசு தடையாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- எதிர்க்கட்சி அரசியல் செய்யமால் அவியலா செய்யுமா என்று மு.க.ஸ்டாலின் கூறியதில் இருந்து எதிர்க்கட்சி என்றால் எல்லா பிரச்சனையிலும் அரசியல் தான் செய்யும் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். 

அரசியல் செய்வதற்கு எவ்வளவோ வழி உள்ளது. அதனை விட்டு அரசு திட்டங்களை குற்றம் குறை சொல்வது தனது வாடிக்கை என்பதனை மு.க.ஸ்டாலின் ஒத்துக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி என்றால் நாணயத்தின் இருபக்கம் போன்று செயல்பட வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். எதிர்க்கட்சிக்கான உரிமை மற்றும் கடமையை அண்ணா தெளிவாக கூறியுள்ளார். ஆனால் அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் கொள்கைகளை எவ்வளது தூரம் கடைபிடிப்பார் என்பது நமக்கு தெரியும். 

மு.க.ஸ்டாலின் பற்றி மக்கள் எடைபோடுவதற்கு இது போன்று இன்னும் சில கருத்துகள் சொன்னால் போதும். திமுக எதிர்க்கட்சிக்கு கூட லாயக்கில்லை என்று வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட மக்கள் வழங்க மாட்டார்கள். 2011-ல் திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை. அதே போன்று 2021லும் திமுக எதிர்க்கட்சியாக வரமால் இருக்க இது போன்று கருத்துகளை மு.க.ஸ்டாலின் கூறினால்போதும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

click me!