தாயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்.. கோபாலபுரம் இல்லத்தில் நெகிழ்ச்சி..

Published : May 03, 2021, 12:51 PM IST
தாயாளு  அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்.. கோபாலபுரம் இல்லத்தில் நெகிழ்ச்சி..

சுருக்கம்

முன்னதாக கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலினுக்கு அவரது சகோதர் செல்வி ஆரத்தி எடுத்து வரவேற்றார். வாழ்த்து பெற்ற பிறகு புறபட்ட ஸ்டாலின் சிறு வயதில் இருந்து தனக்கு அறிமுகமான எதிர்விட்டார்  ராதா பாண்டூரங்கனை சந்தித்து வாழ்த்து பெற்றார் 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்ற நிலையில் இன்று காலை கோபாலபுரம் இல்லம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும்  தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலினுக்கு அவரது சகோதர் செல்வி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

வாழ்த்து பெற்ற பிறகு புறபட்ட ஸ்டாலின் சிறு வயதில் இருந்து தனக்கு அறிமுகமான எதிர்விட்டார்  ராதா பாண்டூரங்கனை சந்தித்து வாழ்த்து பெற்றார். வீட்டு முகப்பில் இருந்து ஸ்டாலினை பார்த்து கை அசைத்த ராதா பாண்டுரங்கன்  முதல்வர் ஆன பிறகு அவர் எங்களை சந்திப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சிறு வயதில் இருந்தே ஸ்டாலின் வளர்ச்சி பார்த்துவரும் தனக்கு அவர் முதல்வர் ஆனதில் மகிழ்ச்சி என்றார். 

சட்டமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வருகின்றார், திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஐ.லியோனி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!