காவிரிக்காக மோடியை சந்திக்க உள்ளேன்: ஸ்டாலின் அதிரடி

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 03:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
காவிரிக்காக மோடியை சந்திக்க உள்ளேன்: ஸ்டாலின் அதிரடி

சுருக்கம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனைக் குறித்து விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் தொடங்கியது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், துரைமுருகன், வி.பபி துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவுன்குமார், பலராமன், மார்க்சிஸ்ட் கம்யூ.வைச் சேர்ந்த சண்முகம், சி.பி.ஐ.யைச் சேர்ந்த துரை மாணிக்கம், குணசேகரன், அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாள்ர பி.ஆர். பாண்டியன், விவசாய கூட்டு இயக்க தலைவர் அய்யாக்கண்ணு, திமுக விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி. இராமலிங்கம் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், விவசாயிகளுடன் பிரதமரை சந்தித்து தீர்வுகாண வலியுறுத்தியும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?