நடவடிக்கை எடுங்க.. முடியலைனா பதவி விலகுங்க..! முதல்வரை விளாசிய ஸ்டாலின்..!

Asianet News Tamil  
Published : Nov 02, 2017, 03:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
நடவடிக்கை எடுங்க.. முடியலைனா பதவி விலகுங்க..! முதல்வரை விளாசிய ஸ்டாலின்..!

சுருக்கம்

stalin emphasis palanisamy resign chief minister

பருவமழையை எதிர்கொள்ள தீவிரமான நடவடிக்கைகளை அரசு விரைவாக எடுக்க வேண்டும் எனவும் அப்படி முடியவில்லை எனில், முதல்வர் பழனிசாமி பதவிவிலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள சென்னை ஓட்டேரி பகுதியை பார்வையிட்ட ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்திருந்த நிலையில், அப்படியான நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கும்போது முதல்வர் பழனிசாமி கண் துடைப்பிற்காக சேலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

கனமழை சென்னையில் பெய்துகொண்டிருக்கும்போது சேலத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தி நாடகம் நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி. கனமழை பெய்துவரும் நிலையில், கொடுங்கையூரில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இனியாவது  முதல்வர் பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில், முதல்வர் பழனிசாமி பதவிவிலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.! திமுக, அதிமுகவை உதறித்தள்ள ரெடியாகும் தோழமைகள்.?!
Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!