"பொது விநியோக திட்டத்தில் புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின் கடும் கண்டனம்!

First Published Aug 1, 2017, 1:48 PM IST
Highlights
stalin demands to get back new rules in ration


பொது விநியோக திட்டத்தில் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்பது உள்ளிட்டவை குறித்து அறிவிப்பு வெளியானது.

வருமான வரி செலுத்தும் நபரை, குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொணட குடும்பங்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.

அதேபோல், மத்திய - மாநில, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய - மாநில தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.

பல்வேறு சட்டங்களின்கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள். நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள். ஏசி. பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும், பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.

அது மட்டுமல்லாமல் 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்திருந்தாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பொது விநியோக திட்டத்தில் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏழை - எளிய மக்களை பாதிக்கும் வகையிலான நிபந்தனைகளை திமுக வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். புதிய நிபந்தனைகள் அடங்கிய அரசிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதியின்படி பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!