
மக்களின் ஆதரவே இல்லாத சில அப்பாவி மற்றும் அனாதை தலைவர்கள் தங்களை உண்மையாகவே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பதாக பழனிச்சாமியையும் பன்னீர்செல்வத்தையும் விமர்சித்துள்ளார் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்.
திண்டுக்கல்லில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மக்களின் போராட்டத்தை அரசு மதிப்பதில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, தமிழகத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
மக்களின் ஆதரவு இல்லாத அப்பாவி, அனாதை தலைவர்கள் தங்களை உண்மையாகவே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பதாக பழனிச்சாமியையும் பன்னீர்செல்வத்தையும் விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சி கட்டிலில் அமரும் தருணத்தை மக்கள் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் தலைவராகக் கூட ஆக முடியாத ஸ்டாலின் முதல்வராக நினைக்கிறார் என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஸ்டாலின், தான் எந்த பொறுப்பில் இருந்தாலும் மக்களில் ஒருவராக இருந்து பணியாற்றுவதாக தெரிவித்தார்.