
கொள்ளை அடிப்பதிலும் கமிஷன் அடிப்பதிலும் முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மக்களின் வரிப்பணத்தின் மூலம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அரசியல் செய்வதாக விமர்சித்தார்.
பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி என எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசியுள்ளனர். அதை விமர்சிக்கும் வகையில் பேசிய ஸ்டாலின், ஆம். பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கிதான். கொள்ளை அடிப்பதிலும் கமிஷன் அடிப்பதிலும் அவர்கள் இருவரும் இரட்டை குழல் துப்பாக்கிதான் என விமர்சித்தார்.