கமல் முதலமைச்சர் ஆவார்... திமுக.,வுக்கு டஃப் ஃபைட் கொடுப்பார்: அடித்துக் கூறுகிறார் பிரபல சோதிடர்

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
கமல் முதலமைச்சர் ஆவார்... திமுக.,வுக்கு டஃப் ஃபைட் கொடுப்பார்: அடித்துக் கூறுகிறார் பிரபல சோதிடர்

சுருக்கம்

kamahaasan will become chief minister one day says famous astrologer

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என்கிறார் பிரபல சோதிடர் ராதன் பண்டிட்.   

சோதிடர் ராதன் பண்டிட் இது குறித்து தனது யுடியூப் தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பவை...

கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம். அவருக்கு நிறைய யோகங்கள் ஜாதக ரீதியாக உள்ளன. அவர் சிறந்த நிர்வாகி. அவருக்கு துலா லக்னம். 2-ல் சுக்கிரன். ஆட்சி. 2க்கு உரிய செவ்வாய் உச்சம். சொன்னதை செய்வார்.

கடுமையான உழைப்பாளி. அவருக்கு சந்திர மங்கள, குரு சந்திர, குரு மங்கள யோகங்கள் உள்ள ஜாதகம். கேந்திராதிபத்ய யோகம் உள்ளது. அதுபோல் களத்ர தோஷம் உள்ளிட்ட சில தோஷங்களும் உள்ளது. 

இப்போதைக்கு ஸ்டாலின்தான் அரசியல் துறையில் உள்ளார். அவருக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் வகையில் எதிரில் யார் இருக்கிறார் என்றால், சினிமாத் துறையில் அது கமல்ஹாசன் தான்.  அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கட்சியின்  ஸ்டாலினை விடவும் அதிக வெற்றிகளை பெறுவார். 

அவர் தன்னுடைய துறையில் நன்றாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மனிதனாக இன்னும் வாழவில்லை.  கமல்ஹாசன் திரைப்படத் துறையில் பல வெற்றிகளைப் பெற்றாலும் தனது வாழ்க்கையை இன்னும் வாழவில்லை, 

ஒரு புத்திசாலி, அறிவாளி, அவர் இன்று வரை வாழவில்லை. ஆனால் அவர் இனி மேல் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்காக வாழும் வாழ்க்கை 
இனிமேல்தான் அவர் எல்லாவற்றையும் பார்க்கப்போகிறார். 63 வயது ஆகிறது. இன்னும் ஒரு 20 வருடம் பீக். கமல்ஹாசன் 80 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருப்பார்  இனிமேல்தான் அவர் வாழப்போகிறார். அவரால் பலர் பயனடையப் போகிறார்கள்...

அவருக்கு குடும்ப வாழ்க்கை எல்லாம் மீடியமான ஜாதகம். அது ஒரு கிராமத்து நபர் போலத்தான் இருக்கும். இப்போது அவருக்கு சுக்கிர தசையில் புதன் புத்தி... மக்களுக்காக அவர் வருவார். முதலமைச்சராக உட்காருவார். 19 ஜூன்  பின்னர் கேது புத்தி, பின்னர் சூரியதசையில் உச்சம். 

கொஞ்சம் யோசிப்பார். ஆனால் நிச்சயம் வருவார். தோல்வி அடைந்தால் விடாப்பிடியாக இருந்து வெற்றியை அடைவார்.  உலக அளவில் இவருக்கு உதவி கிடைக்கும். பொருளாதார உதவி உலக அளவில் இருந்து கிடைக்கும்... திமுக.,வுக்கு சரியான ஃபைட் கொடுப்பார். 

நன்கு முயற்சி செய்தால், அவர் அடுத்த தேர்தலிலேயே முதலமைச்சராக வர வாய்ப்பு உண்டு.  கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப்போல இருக்கிறது. சொல்லப் போனால் அவர் இன்னொரு எம்.ஜி.ஆர். போல் வருவார்.

- இவ்வாறு கூறுகிறார் தில்லி வாழ் தமிழரான ராதன் பண்டிட்.  

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!