‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!

Published : Feb 13, 2026, 11:59 AM IST
Stalin vs Eps

சுருக்கம்

அரசு கொடுத்த தொகை ரூ. 34,000 ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே ரூ.3,50,000. இதை விடியாஆட்சி வீட்டுBillலே சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுகவினர் அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக ‘1000 ரூபாய்’ கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா ஸ்டாலின் அவர்களே?

சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே ரூ.3,50,000. இதை விடியாஆட்சி வீட்டுBillலே சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுகவினர் அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?

இப்போது மாதம் 2000 ரூபாய் என்று நான் அளித்த தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே... யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.

அனைத்து குடும்ப அட்டைக்கும் என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில் குல விளக்குத் திட்டம் முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2000 என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

17 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி பிரவேசம்... வங்கதேசத்தின் திடீர் பிரதமாராகும் தாரிக் ரஹ்மான்..!
"ஈபிஎஸ் கோட்டையில் 'தளபதி' என்ட்ரி: சேலத்தில் இன்று விஜய் காட்டப்போகும் அரசியல் அதிரடி!"