ஸ்டாலின் முதல்வராகும் யோகம் அவர் ஜாதகத்திலேயே கிடையாது... திமுகவை கதறவிடும் எச்.ராஜா...!

Published : Dec 25, 2020, 06:20 PM ISTUpdated : Dec 25, 2020, 06:27 PM IST
ஸ்டாலின் முதல்வராகும் யோகம் அவர் ஜாதகத்திலேயே கிடையாது... திமுகவை கதறவிடும் எச்.ராஜா...!

சுருக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரடி அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரடி அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா;- வீரமங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அவரது நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம். வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு மறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு நமது பாட புத்தகங்களில் கார்வெல் முகல் பேரரசு போன்றவர்களைப் பற்றிய பாட புத்தகத்தில் இருக்கிறது.

தமிழ மண்ணின் மன்னர்களைப் பற்றிய வரலாறு பாட புத்தகத்தில் இல்லை. தமிழ் மன்னர்களின் வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். பாபருக்கு மகன் யார் என்று புத்தகத்தில் இருக்கு. ஆனால் ராஜராஜ சோழனுக்கு அப்பா யார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. இப்படி தமிழக பாட புத்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்கவர்களின் பாடங்கள் புத்தகத்தில் இடம் பெறவேண்டும் என்றார்.

மேலும், ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் நடத்துவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, மக்கள் முடிவாக இருக்கிறார்கள் ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இல்லவே இல்லை. அவர் ஜாதகத்திலும் அது இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரடி அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ரூ.250 கோடி ஊழல்... சேகர்பாபு, மேயர் பிரியா, ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர்கள் பகீர் எச்சரிக்கை..!
முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!