ஸ்டாலின் - எடப்பாடி மோதல்!! திமுக கணக்கை சரி செய்ய நேரில் வந்து முதலமைச்சரை சந்தித்த கட்கரி?

First Published Aug 7, 2018, 11:11 AM IST
Highlights

திமுகவின் சில கோரிக்கைகளை ஏற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொடர்ந்து மறுத்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நலம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனை சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.

இது ஒரு புறம் இருக்க நிதின் சென்னை வந்தததின் உண்மையான காரணம் வேறு என்கின்றனர் விவரம் அறிந்த சில அரசியல் வாதிகள்.  கடந்த சில நாட்களாக திமுக வைத்த சில கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிடப்பில் போட்டுள்ளதாகவும் இதனால் அதிருப்தி அடைந்த திமுக சில முக்கிய நிர்வாகிகள் மூலம் பிரதமரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து திமுகவினருக்கு ஓகே சொன்ன பிரதமர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக இபிஎஸ் – நிதின் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த பின் சென்னை அடையாறில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி சென்னை அடையாறு தனியார் ஓட்டலில் தங்கியுள்ள மத்திய மந்திரி கட்காரியை இன்று  காலை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை பணிகள் உள்ளிட்டவை பற்றி கட்கரியுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் திமுகவின் கோரிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம், நிதின் கட்கரி பேசியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்திகளை கசிய விட்டுள்ளன. திமுகவின் கோரிக்கைகள் என்ன? அது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!