மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!! பின்னணி என்ன..?

Published : Aug 07, 2018, 10:39 AM IST
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!! பின்னணி என்ன..?

சுருக்கம்

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை வந்துள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

நேற்று சென்னை வந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். 

அதன்பின்னர் தனியார் ஹோட்டலில் நிதின் கட்கரி தங்கினார். இந்நிலையில், இன்று காலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது சென்னை-சேலம் 8 வழிச்சாலை மற்றும் தமிழகத்தில் நடைபெறும் உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் மற்ற சாலை பணிகள் ஆகியவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. 

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு, இத்திட்டத்தால் நிலத்தை இழக்கும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடனான முதல்வரின் சந்திப்பில் அதிகளவில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!